“என்னை ஆபாச படம் நடிச்சவன்னு சொன்னீங்க” – கடுப்பான ரோஜா


செம்பருத்தி படம் வெளியானதும் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நடிகை ரோஜா .

அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு Red Carpet விரித்தது. அப்படியே ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். பிறகு செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார். இந்நிலையில் அங்கேயே MLA ஆனார்.

மேலும் அங்க முதலமைச்சர் பதவியில் 2 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் மரியாதை Steady- ஆகவே இருக்கிறது.

இந்நிலையில், கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசிய போது, என் மனைவியை பற்றியும் தாறுமாறாக பேசுகின்றனர் ஆளுங்கட்சியினர் என கண்ணீர் விட்டு அழுதார். இனிமே வந்தா முதலமைச்சராக தான் இந்த சட்டப் பேரவைக்கு வருவேன் என சபதம் போட்டார் சந்திர பாபு.

இந்த வீடியோ ஒரு பக்கம் வைரலாக, அதை மிஞ்சும் வகையில் பிரபல நடிகையும், ஒய்எஸ்ஆர் கட்சி எம்எல்ஏவுமான ரோஜா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார். அதில், சட்டசபையில் பலமுறை என்னை பற்றி தப்பாக பேசினீர்களே..? நான் ஆபாச படத்தில் நடித்தவள் என்று கூறி சிடி ஒன்றை சட்டசபை கூட்டத்தொடரில் எடுத்து வந்தீர்களே? அப்போது அநாகரிகமாக தெரியவில்லையா? உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா..?” என்று கோபத்தில் விளாசியுள்ளார் ரோஜா.

20 November, 2021, 1:44 pm

Views: -

16

4

More Stories