நயன்தாராவை கட்டி அணைத்து, ரகசியத்தை உடைத்த விக்னேஷ் சிவன் !


நயன்தாரா என்னதான் டாப் ஹீரோயினாக இருந்தாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல என்கிற ரேஞ்சுக்கு இந்த காதல் தீ பரவுகிறது.

என்னதான் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. கமர்சியல் மட்டுமில்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். தற்போது அட்லியின் உதவியோடு பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு திருமணம் இல்லை விக்னேஷ் சிவனிடன் நயன்தாரா கூறியிருக்கிறார்.

விக்னேஷ் சிவன் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த முறை வித்தியாசமாக இருவரும் கட்டியணைத்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். எதற்காக என்றால் இவர் தயாரித்த கூழாங்கல் படம் இவருக்கு ஒரு விருதை அள்ளிக் கொடுத்து இருக்கிறது. அந்த முதல் விருது பெற்றதற்காக இருவரும் சந்தோஷமாக போஸ் கொடுத்து இளைஞர்களின் வயிற்றில் எரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

8 August, 2021, 2:24 pm

Views: -

2

8

More Stories