“இதனாலதான் விக்னேஷ் சிவனை பிடிச்சு போச்சு…” ரகசியத்தை உடைத்த நயன்தாரா !

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.
இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார் நயன்தாரா. மேலும், இந்த படம் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்று வருகிறது.
நயன்தாராவிற்கு தற்போது 36 வயது ஆகின்றது. இந்நிலையில், Vijay tv நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்தம் முடிந்துவிட்டதாகவும், அவர் போட்ட மோதிரம் தான் இது என்று கூறியுள்ள நிலையில், அவரை ஏன் காதலித்தேன்? என்கிற விஷயமும் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

அதில், “இதுவரை நான் பார்த்த ஆண்கள் எல்லோருமே அவங்களுக்கு வரும் Wife – ஐ வேலைக்கு அனுப்பாமல் வீட்டில் அடக்க ஒடுக்கமாக இருக்கும் பெண்ணாகவே இருக்க சொல்லுவார்கள். ஆனால் விக்கி, அப்படி எதுவும் என்னிடம் சொல்லவில்லை. நான் அவரிடம் இதுநாள் வரை எதற்கும் அனுமதி கேட்டதே இல்லை, இன்னும் சொல்ல போனால், அவரிடம் பழகிய பின்னர் தான் எனக்கு வேலை அதிகமாக இருந்தது. என்னுடைய ஒவ்வொரு வேலையிலும் அவர் மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டார். அதுமட்டுமின்றி நான் செய்யும் வேலையை உற்சாகபடுத்தவும் செய்தார். இது எனக்கு ரொம்ப பிடித்தது என்று கூறினார்.
மேலும், நான் அவருடன் பழகிய இந்த 6 வருடங்களில் தினமும் அவரது அம்மாவிடம் சாப்ட்டியா, தங்கையிடம் சாப்பிட்டியா என்று அதை போன் செய்து கேட்பார். அவர்கள் சாப்பிட்டு விட்டார்கள் என்று தெரிந்த அப்புறம் தான் இவர் சாப்பிடுவார். ஒரு அம்மாவையும், தங்கையையும், இவ்வளவு நல்லா அழகாக பார்த்துக் கொள்ளும் ஒருவர் கண்டிப்பாக தனக்கு வரும் துணையையும் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது” என்று நயன்தாரா கூறினார்.
Views: -

10

3