நடிகை நந்திதாவின் தந்தை திடீர் மரணம்! கண்ணீருடன் வெளியிட்ட பதிவு !


பிரபல திரைப்பட நடிகையான நந்திதா ஸ்வேதாவின் தந்தை மரணமடைந்தது திரை உலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், நேற்று இரவு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தன்னுடைய தந்தை சிவசாமி 54 வயதில் உயிரிழந்துவிட்டதாகவும், அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

20 September, 2021, 8:51 am

Views: -

1

0

More Stories