மறுபடியும் அம்மா ஆகிட்டீங்களா ? பரபரப்பைக் கிளப்பிய மைனா நந்தினியின் புகைப்படம் !


சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.
சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில், நந்தினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது, ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிடும் புகைப்படங்கள் உச்சகட்டம். அதிலும் இப்போது தான் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட பலரும் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி விட்டார் என்று நினைத்துவிட்டனர்.

பிறகு, கேப்ஷனை பார்த்த பிறகு தான் இது பழைய புகைப்படம் என்பது தெரிய வந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “நாங்க கூட புதுசுன்னு நெனச்சிட்டோங்க..” என்று கலாய்த்து வருகின்றனர்.

6 January, 2022, 9:24 am

Views: -

1

0

More Stories