“உங்கள எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே ” பிரபல நடிகையின் வைரல் புகைப்படங்கள் !!


மீரா வாசுதேவன் (Meera Vasudevan) ஒரு இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் .

இவர் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார் . மீராவாசுதேவன் 2003-ஆம் ஆண்டு தமிழில் “உன்னை சரணடைந்தேன்” என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு உள்ளிட்ட சில படங்களில் கதாபாத்திர வேடங்களிலும் ,கதாநாயகியாகவும் நடித்தார்.

நடிகை மீரா வாசுதேவன் தமிழில் சில நல்ல படங்கள் நடித்திருந்தாலும் , எந்த படமும் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுக்கவில்லை. அதே மாதிரி தான் மலையாள படங்களிலும் இவருக்கு பெரியஅளவில் மார்க்கெட் இல்லாமல் போனது.

இவர் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மோகன்லாலுக்கு ஜோடியாக, “தன்மத்ரா” என்ற படத்தில் அறிமுகமானார் அந்த ஆண்டுக்கான சிறந்த அறிமுக நடிகைக்கான ” ஏசியானெட் விருது ” இவர் பெற்றார்.

“தன்மத்ரா” படம் ஹிட்டானாலும் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இப்போது சில மலையாள படங்களில் நடித்துவருகிறார். நடிகை மீரா வாசுதேவனின் இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிந்துள்ளது இவருக்கு ஒரு மகன் உள்ளார். இப்போதுவரை சினிமாவில் மலையாளம், தமிழ் என படங்கள் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.

மீரா வாசுதேவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ” எனக்கு மொழி பிரச்சனை இருந்த காரணத்தினால் என்னால் செய்யாது கதை கொண்ட படங்களை தேர்வு செய்யாமல் போய்விட்டது . என்னுடைய மேனேஜர் சொன்ன படங்களில் நடித்தேன் ஆனால், எல்லா படங்களும் தோல்வியிலேயே முடிந்தன. இப்போது, நானே கதை கேட்டு நடிக்க தொடங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

18 February, 2022, 4:25 pm

Views: -

13

4

More Stories