“Make Up இல்லைனாலும், மார்க்கமா இருக்கீங்க..” கீர்த்தி சுரேஷின் Latest Photos …!


விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரை கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது, அதன் அடுத்த படியாக தற்போது அதிலிருந்து முற்றிலும் குணமாகி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேக்கப் எதுவும் போடாமல் இயல்பாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

18 January, 2022, 1:50 pm

Views: -

6

4

More Stories