சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியா இவர்? கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது போலயே..!


கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்புதொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி முடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2ம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சிலம்பரசனுக்கு அம்மாவாக ராதிகா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கயடு லோகர் நடித்து வருகிறார். தற்போது அவரது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர் சிம்பு ரசிகர்கள்.

ஒரு மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய கயடு லோகர், கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக நடித்து வருகிறார். தற்போது அவர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகி உள்ளார். கடற்கரையில் பிகினி உடையில் அவர் நடத்திய போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

29 September, 2021, 3:38 pm

Views: -

10

3

More Stories