நஸ்ரியாவை போல் நைட்டியில் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை….! வைரலாகும் வீடியோ..!

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி தற்போது பெரிய திரை வந்திருப்பவர்கள் வரிசையில் அகல்யாவும் சேர்ந்துள்ளார். சுமதி என்ற தொலைக்காட்சித் தொடரிலும் அலுவலகம் என்ற தொடரிலும் 2013ஆம் ஆண்டு முதல் 2015 வரை விஜய் தொலைக்காட்சியில் நடிக்க தொடங்கிய அகல்யா, அதன் பின் ஆதித்யா டிவியில் ஒளிபரப்பான மாமா நீங்க எங்க இருக்கீங்க இன்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சி அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றது. அதன்பின் நீங்க சொல்லுங்க டூட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியும் பெரிய ஹிட்டானது. அதன்பின் பெரிய திரைக்கு சென்ற அகல்யா தேவராட்டம், ராட்சசி, தாராள பிரபு, K13 போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
கொஞ்சம் உடல் பருமனாக இருந்த அகல்யா தற்போது உடல் எடையை குறைத்து வேற லெவல் transformation கொடுத்துள்ளார். ஆபரேஷன் எதுவும் இல்லாமல் டயட் மூலமாக மட்டுமே உடல் எடையை குறைத்திருக்கும் அகல்யாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே சிம்பு, நமீதா ஆகியோர் உடல் எடையை குறைத்து இருந்த நிலையில் தற்போது அகல்யாவும் ஒன்றரை மாதத்தில் டயட் மூலமாக உடல் எடையை குறைத்தது, அனைவரும் ஃபிட்டாக இருப்பதற்கான உத்வேகமாக இருந்து வருகிறது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அகல்யா, தற்போது ராஜா ராணி படத்தில் வரும் நஸ்ரியா ஆட்டத்தை போல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை 71 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.
Views: -

2

0