பணத்துக்காக ஒருபோதும் பிடிக்காததை செய்ய மாட்டேன்..! பிடிவாதம் பிடிக்கும் ஆண்ட்ரியா..


நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக இருக்கிறார்.  பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் ஜோடிசேர்ந்து நடித்தார்.  தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். இவர் பாடல் , நடிப்பு அல்லாமல் சில கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் . இவர் கவர்ச்சி படங்களை விட நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கே ஆர்வம் காட்டி வருகின்றார்.

தன்னிடம் வரும் படங்களின் கதைச் சுருக்கத்தை மட்டுமே கேட்கிறார். அது அவருக்கு பிடித்திருந்தால் மட்டுமே இயக்குனர்களை நேரில் அழைத்து முழு கதையையும் கேட்கிறாராம். கதைச் சுருக்கம் பிடிக்கவில்லை என்றால்>  இந்த படத்தில் எனக்கு நடிக்க விருப்பமில்லை என்று இயக்குனர்களுக்கு மெசேஜ் அனுப்பி விடுகிறாராம். பிடிக்காமல் கதைகளில் பணத்துக்காக நடிக்க போவதில்லை என்பதில் மட்டும் கவனமாக உள்ளாராம் ஆண்ட்ரியா.

6 February, 2022, 1:41 pm

Views: -

1

2

More Stories