மீண்டும் வில்லனாக களமிறங்க போகும் விஜய்சேதுபதி.. யாரை எதிர்க்கப் போகிறார் தெரியுமா..?


ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி போன்ற வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் இயக்குனர் ராஜு முருகன்.
இதனால் அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடிகர் கார்த்தி அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த படத்திற்கு வில்லனாக தேர்தெடுக்கும் பணியில் இறங்கிய இயக்குனர் விஜய் சேதுபதியை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது.

எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார் என்று எக்கச்சக்கமான படங்களை நடித்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு என்றுமே தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் உண்டு. இந்நிலையில் ராஜூ முருகனின் அடுத்த படத்தின் கதையை சொன்னதும் விஜய் சேதுபதியும் இதில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறாராம்.

தற்போது 15 படங்களை கையில் வைத்திருக்கும் விஜய் சேதுபதி, இந்தப் படத்திற்கு கால்ஷீட் தருவது தாமதமாகும் என்று இயக்குனர் ராஜுமுருகனிடம் கூறியிருக்கிறாராம் விஜய்சேதுபதி. இந்த கதாபாத்திரம் பவானியை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

26 February, 2022, 3:28 pm

Views: -

0

0

More Stories