“போடுறா வெடிய…” அனல் பறக்கும் Combo மீண்டும் கார்த்தி இயக்குனருடன் விஜய் !

மாஸ்டர் படத்தை அடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் நடித்து வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் வந்து நடத்தினார்கள். ஆனால் இப்போது படக்குழு டெல்லியில் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
எப்போதும், தான் நடித்துக் கொண்டிருக்கும் படம் முடிந்த பிறகுதான் அடுத்த படத்தை பற்றி யோசிப்பார் விஜய். தற்போது Beast பட வேலையே இன்னும் முடியாத நிலையில் அடுத்ததாக தளபதி 66 படத்தை தயாரிக்கப் போவது தில் ராஜு, அதை இயக்கப்போவது தோழா, மகரிஷி படங்களை இயக்கிய வம்சி என்னும் இயக்குனர் என்று தகவல்கள் உறுதி ஆகியுள்ளது, இதனால் ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கிறார்கள்.
Views: -

1

0