சூர்யா நடிக்கும் அடுத்த இரண்டு படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்..! அப்போ செம ஹிட்டுதான்..!


தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்ட சூர்யா. சிங்கம் 2 படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் ஹிட் என சொல்லிக்கொள்ளும் படி ஒரு படம் அமையவில்லை என வருத்தத்தில் இருந்தார் அதை தவிடுபொடி ஆக்கி விதத்தில் சூரரை போற்று பெரிய வெற்றி அடைந்துள்ளது.

வித்தியாசமான கதைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் உள்ள நடிகர் சூர்யா எட்டு வருடங்களாக சறுக்கல்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் சூரரைப்போற்று மிக பெரிய Comeback கொடுத்தது.

தொடர்ந்து வரிசையாக படம் நடித்து வருகிறார் சூர்யா. தற்போது ஜெய்பீம் படத்தில் நடித்துள்ள அவர், அடுத்ததாக எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெய்பீம் தீபாவளி அன்று ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் அடுத்ததாக பாலா இயக்கத்தில் ஒருபடம் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா – சூர்யா இணையும் படத்திலும், வாடிவாசல் படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் இருவர் கூட்டணியில் சூரரைப்போற்று படத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

20 October, 2021, 3:42 pm

Views: -

2

0

More Stories