சிவகார்த்திகேயனின் டான் பட சூட்டிங் ஸ்பாட்டில் செல்ஃபி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் டாப்பில் இருக்கிறார். தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து, டான் படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் பட த்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டான் பட த்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, முனீஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் டான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

உலக அதிசயமான தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவும் கலந்து கொண்டுள்ளதால் பாடல் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இந்நிலையில் வரும் டிசம்பரில் இந்தப் படம் வெளியாகலாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Views: -

3

0