நடிகர் சூர்யாவுடன் மோதும் சசிகுமார்!!- அதிரடி சரவெடி confirm!!

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார் . இவர் அப்படத்தில் ‘பரமன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் . முதல் படமே ஹிட் கொடுத்த நடிகர் சசிகுமார் , மக்கள் மனதில் நல்ல இயக்குனராக மட்டுமில்லாமல் நல்ல நடிகராகவும் பெயர் பெற்றார் . தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கிய சசிகுமார் தற்போது வரை தனது மார்க்கெட்டை தக்கவைத்துக்கொண்டுள்ளார் . சில தினங்களுக்கு முன்பு நடிகர் சசிகுமார் மற்றும் ஜோதிகா , சமுத்திரக்கனி இணைத்து நடித்த “உடன்பிறப்பே” படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியது . இது எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை சுமாரான படம் என்ற விமர்சனங்களையே பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள “எம்ஜிஆர்மகன் ” படம் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ‘சத்யராஜ்’ , ‘சரண்யா பொன்வண்ணன்’, ‘மிருணாளினி ரவி’, ‘சிங்கம்புலி’ ஆகியோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது .

நடிகர் சூர்யா சமீபத்தில் நடித்து தீபாவளியன்று வெளியாக உள்ள படம் “ஜெய் பீம்” . இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது . தற்போது இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது . அடுத்தடுத்து நடிகர் சூர்யா பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டுள்ளார். நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் கொடுக்க அந்த வரிசையில் “ஜெய் பீம்” படமும் வெற்றிப்படமாகவே அமையும் என நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .

சசிகுமார் நடிப்பில் “எம்ஜிஆர்மகன் ” , சூர்யா நடிப்பில் ” ஜெய் பீம்” ஆகிய இரு படங்களும் இந்த தீபாவளியன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமாரின் களமிறங்குவது இதுவே முதல் முறை.பொதுவாக திரையரங்குகளில் பெரிய நடிகர்களில் படங்கள் பண்டிகை தினங்களில் மோதிக்கொள்வது இயல்பு , ஆனால் தற்போது திரையரங்குகள் போய் ஓடிடி தளங்களிலும் நடிகர்களின் படங்கள் மோதிக்கொள்வது சினிமாரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Views: -

0

0