பாலு.. எல்லா இடத்துக்கும் வராதீங்க.. போய் வேலைய பாருங்க.. நமக்கு அதுதான் முக்கியம் : ரசிகருக்கு அறிவுரை கூறிய ரஜினி!!


படப்பிடிப்புக்காக நேபாளம் செல்ல சென்னை விமான நிலையம் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பின் தொடர்ந்து வந்த ரசிகரை பார்த்து ஒழுங்காய் போய் வேலை செய்யுங்கள் என அறிவுரை கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

இயக்குனர் நெல்சனின் ஜெயிலர் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற உள்ள நிலையில் அவற்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் விமான மூலம் செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற பின் அங்கிருந்து மாற்று விமானத்தில் நேபாளம் செல்ல உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

31 January, 2023, 5:03 pm

Views: -

0

0