நடிகர் கார்த்தியின் ‘நா பேரு சிவா 2’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.!


இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் 2014 இல் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் தான் மெட்ராஸ். இந்தப் படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடிகை கேத்தரின் தெரேசா நாயகியாக நடித்திருப்பார்.
இந்தப் படத்தை நா பேரு சிவா 2 என்ற பெயரில் ஜனவரி 13-ல் தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை ஸ்டுடியோ கிரீன் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜனவரி 7 ஆம் தேதி வெளியாக இருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படமும், ஜனவரி 14 வெளியாக இருந்த ராதே ஷ்யாம் இரண்டும் தள்ளிப்போனதால், அங்கு 14 சின்ன பட்ஜெட் தெலுங்குப் படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றன. அதில் 15-வது படமாக இணைந்துள்ளது கார்த்தியின் நா பேரு சிவா 2.

2010 இல் வெளியான கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தை தெலுங்கில் நா பேரு சிவா என்ற பெயரில் வெளியிடப்பட்டது. கார்த்தியின் கைதி படத்துக்குப் பிறகு அவருக்கு தெலுங்கு ரசிகர்களும், தெலுங்கு மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது. நா பேரு சிவா 2 வசூல் ரீதியாக வெற்றிப்பெறும் என படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

6 January, 2022, 2:53 pm

Views: -

10

4

More Stories