முதல் முறையாக வெளியான கெளதம் கார்த்திக்கின் தாயார் மற்றும் சகோதரரின் புகைப்படம்


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கௌதம் கார்த்திக். தமிழ் சினிமாவில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக், கடல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகாதேவஹி, இந்திரஜித், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டம், மிஞ்சர் சந்திரமௌலி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கெளதம் கார்த்திக் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் தனது அம்மா சங்கீதா மற்றும் தனது சகோதரர் ஜியான் ஆகியோருடன் இருப்பது போல போஸ் கொடுத்துள்ளார். முதல் நாள் கௌதம் கார்த்திக்கும் அடுத்த நாள் நவரச நாயகன் கார்த்திக்கிற்கும் பிறந்தநாள் வருவதால் திரையுலகினர் பலர் வாழ்த்தி வருகின்றனர்.

14 September, 2021, 3:56 pm

Views: -

2

0