“வாத்தியாராக போகும் மாணவன்”..! நடிகர் தனுஷின் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்…


தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் தற்போது, மாறன் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்ததாக, கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் சார் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் ஒப்பந்தமானார். இப்படத்தை ‘தோழி ப்ரேமா’ ‘ரங் தே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் தற்போது ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக, படத்தின் ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் தனுஷ் மாணவன் கெட்டப்பில் தோன்றியுள்ள இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நடிகர் தனுஷ் ‘வாத்தி’ படத்தின் ஒரு பாதியில் மாணவனாகவும், மற்றோரு பாதியில் கல்லூரி பேராசிரியராகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 January, 2022, 4:50 pm

Views: -

0

1

More Stories