தனுஷ் ENGLISH பேசினதை கேட்டு நக்கலாக சிரித்த கஜோல்..! கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய இரு படங்கள் சமீபத்தில் வெளியானது. கர்ணன் படத்தில் தனக்கான முத்திரையை பதித்து அதன்பின் Greyman என்னும் ஹாலிவுட் Web சீரிஸ்க்காக California சென்றார். இந்தப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் தற்போது மாறன் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட்டில் நடித்து, தற்போது ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார் தனுஷ். பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் ஒரு படத்திலும், ராஞ்சனா படத்திலும் நடித்தார். தற்போது ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் இயக்குனர் இயக்கும் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

என்னதான் நடிப்பில் பெரிய இடத்தை அடைந்தாலும், பாலிவுட் இன்னும் தனது அருவருக்கத்தக்க வகையில் கேலி செய்து வருகிறது. விஐபி 2 படத்தின் ப்ரோமோசனுக்காக கஜோலுடன் பேட்டியில் இருந்த தனுஷின் ஆங்கிலத்தை கேட்டு நக்கலாக சிரித்துள்ளார் கஜோல். என் ஆங்கிலம் கொஞ்சம் மோசம் என்று தெரியும் என கூறியுள்ளார் தனுஷ். இது மட்டுமல்லாமல் லிட்டில் திங்ஸ் என்ற வெப்சீரிஸிலும் தனுஷை கேலி செய்யும் வகையில் வசனம் இடம்பெற்றுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள், பாலிவுட்டையும் இவ்வாறு கேலி செய்தவர்களையும் திட்டி வருகின்றனர்.

20 August, 2021, 6:54 pm

Views: -

3

1

More Stories