தனுஷுக்கு அசுரன்னா, சிம்புவுக்கு இந்த படம் ! சிம்பு – கௌதம் மேனன் படத்தின் புதிய டைட்டில் !

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களுள் ஒருவர் GVM. இவருடைய படத்தின் தலைப்புகள் செந்தமிழில் தான் இருக்கும். இவருக்கு தமிழில் மீது இருக்கும் பற்றை காட்டுகின்றது. தமிழ் ரசிகர்களுக்கு பல அழகான படங்களை கொடுத்தவர். இவர் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இவருடைய சமீப கால படங்கள் AYM, ENPT மேலும் பல படங்கள் அடிக்கடி சிக்கலை சந்தித்தன. மூன்று ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வாய்ஸ் ஓவர் வைத்தே ரிலீஸ் செய்துவிட்டார், படம் படுதோல்வி. அதன் பிறகு விக்ரம் அவர்களை வைத்து துருவ நட்சத்திரம் என்று ஒரு படம் எடுத்தார், என்ன ஆனது என்று அவருக்கே வெளிச்சம். அதன் பிறகு வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபில்ம்ஸ் எடுத்த ‘ ஜோஷ்வா ‘ படம் பாதி முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
தற்போது, சிம்புவை வைத்து கௌதம் மேனன் நீண்ட நாட்கள் எடுக்க இருந்த படம் ஒன்று வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபில்ம் தயாரிக்க இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு நதிகளில் நீராடும் சூரியன் என்று தலைப்பு வைத்துள்ளதாக டிவிட்டரில் வந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் ஜாலியாக இருந்தார்கள். மேலும், இப்போது அந்த படத்தின் தலைப்பு ” வெந்து தணிந்தது காடு” என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தின் First Look – ஐ இப்போது வெளியிட்டுள்ளார்கள். அப்படியே 18 வயசு பையன் மாதிரி வந்து நிற்கிறார் நம்ம சிம்பு, தனுஷுக்கு அசுரன்னா, சிம்புவுக்கு இந்த படம் இருக்கும்.
Views: -

3

2