OMG..நொடியில் உயிர் தப்பிய Babloo பிரித்விராஜ் ! பதறவைக்கும் Video

தமிழ், தெலுங்கு மற்றும் கனடா மொழி படங்களில் நடித்துள்ள Babloo, பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.இவர் முதல் முறையாக சிவாஜி, ரஜினி நடித்த நான் வாழவைப்பேன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான வானமே எல்லை படத்தில் 4 ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக நடித்தார்.
மேலும் அஜித்துடன் அவள் வருவாளா, சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், ராதா மோகனோடு பயணம், மம்மூட்டியுடன் அழகன் உள்பட பல படங்களில் நடித்தவர் பப்லு எனும் பிருத்விராஜ். இவர் படங்கள் மூலம் Famous ஆனதை விட சிம்புவுடன் சண்டை போட்டதன் மூலம் Famous ஆனார் என்பதே உண்மை.
தற்போது ‘கண்ணான கண்ணே’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். தற்போது உடற்பயிற்சி கூடத்தில் இவர் வழக்கம்போல உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக பயிற்சியாளரின் கவனக்குறைவால் வெயிட் இவர் கழுத்தில் விழுந்துவிட்டது. நொடிப்பொழுதில் உயிர் தப்பித்த இந்த வீடியோ பயங்கர வைரலாகி வருகிறது.
Views: -

0

0