6 நாள் தான் டைம்..! நான் கடவுள் படத்தில் ஆர்யா பட்ட கஷ்டம்…! இயக்குனர் பாலா பேட்டி..!


தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா. இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமான சேது நடிகர் விக்ரமிற்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன்பின் இவர் இயக்கிய பிதாமகன், நந்தா, நான் கடவுள், பரதேசி, அவன் இவன் ஆகிய படங்கள் பெரிய ஹிட் ஆனது.

தேசிய விருது பெற்ற பாலா கடைசியாக விக்ரமிற்காக அவரின் மகன் துருவ் விக்ரமை வைத்து அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கை எடுத்தார். ஆனால் அது சரி வராமல் வேறோரு இயக்குனரை வைத்து மீண்டும் எடுத்தனர்.

இந்நிலையில் நான் கடவுள் படத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ள பாலா, அந்த படத்தில் ஆர்யாவின் அறிமுக காட்சியில் வரும் யோகாவை முறையாக செய்ய குறைந்தபட்சம் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகும். ஆனால் அப்படி எடுக்க போவது ஆர்யாவிற்கு தெரியாது. 6 நாட்கள் கற்றுக் கொண்டு வந்து விட்டார். நடிப்பின் மேல் அவ்வளவு வெறி பிடித்தவர் ஆர்யா என கூறியுள்ளார் இயக்குநர் பாலா.

28 September, 2021, 3:37 pm

Views: -

0

0

More Stories