ரோட்டோர கடையில் சாப்பிட்ட தென்னிந்திய பிரபல நடிகர்….! இணையத்தில் தீயாய் வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். கடைசியாக இவர் நடித்த அல்லு வைக்குந்தபுரம் படத்தில் புட்ட பொம்மா பாடல் ரசிகர்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் ஆட்டம் போட வைத்தது. பெரிய ஸ்டாராக இருந்தாலும் எளிமையாக இருப்பவர் அல்லு அர்ஜூன்.
ஆர்யா, என் பெயர் சூர்யா, என் நாடு இந்தியா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா லெவலில் உருவாகி வரும் இந்த படம் ரூ. 250 கோடியில் உருவாகி வருகிறது. அதில் ராஷ்மிகா மந்தனா, வில்லனாக பஹத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு காக்கிநாடா அருகில் நடைபெற்று வருகிறது. இங்கு ஹோட்டலில் தங்கியுள்ள அல்லு அர்ஜூன், தனது குழுவுடன் ரோட்டு கடையில் சாப்பிடும் வீடியோ, புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இவ்வளவு சிம்ப்ளிசிட்டியா, என்னா மனுஷன்யா என ரசிகர்கள், நெட்டிசன்கள் மெச்சி வருகின்றனர்.
Views: -

3

0