தல அஜித்தின் Real சூரரைப் போற்று Moment! 60 குழந்தைகளை Flight-ல் அழைத்து சென்ற அஜித் !

தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு, “இல்லை” என்றே கூறுவது இல்லை.

தமிழ் சினிமாவில் அல்டிமேட்ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித். அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். நடிப்பையும் தாண்டி நடிகர் அஜீத்துக்கு நல்ல பெயர் இருக்கிறது என்றால் அவரின் நல்ல குணம் தான் காரணம்.

என்னடா அஜித்துக்கு இப்படி சொம்பு தூக்குறாங்களே, என்று நினைக்க வேண்டாம் இதற்கு ஒரு சம்பவம் உதாரணம். கடந்த வருடம் நடிகர் சூர்யா சூரரை போற்று படத்திற்காக அகரம் நிறுவனத்தில் படித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளின் விமானத்தில் பயணிக்கும் கனவை நிறைவேற்றுவதற்காக சிலரை விமானத்தில் அழைத்து சென்றார்.

இதை இருபத்தியோரு வருடங்களுக்கு முன் அறுபது குழந்தைகளை விமானத்தில் பயணிக்க வைத்திருந்தார் நடிகர் அஜித். இந்தப் புகைப்படங்கள் இப்போது வெளியாகி தல ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Views: -

3

0