விஜய்-யை முந்தும் அஜித்… காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்..!


அஜித் ரசிகர்களின் 2 வருட காத்திருப்பு போராட்டம், வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தான். ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி, நடித்துள்ள படம் தான் வலிமை திரைப்படம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், கடந்த 13 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக படத்தின் வெளியிட்டு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக, அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறித்தது அஜித் ரசிகர்கள் மிகவும் கவலையடைச் செய்தது.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையையொட்டி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வலிமை படத்தினை மார்ச் மாதமே திரையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியோ இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த ‘வலிமை’ படத்தை, திரையில் பார்க்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பம்.

18 January, 2022, 11:50 am

Views: -

1

0

More Stories