80ஸ் REUNION DANCE VIDEO, ரம்யாகிருஷ்ணனுடன் கமல் போஸ் !


நாம் அதிகம் பார்த்து ரசித்த நடிகைகள் முக்கால்வாசி பேர் 80களில் நடித்த நடிகைகள் தான். அப்படி 80ஸ் நடிகைகள் பலர் ஒன்று சேர்ந்து நடமானமாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அப்படி 80களில் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருந்தவர்களில் முக்கியமானவர் சுஹாசினி. இவர் கமலின் அண்ணன் சாருஹாசனின் மகள், அதுமட்டுமில்லாமல் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி. சமீபத்தில் இவரது 60வது பிறந்தநாளை கொண்டாடினர். தனது சித்தப்பா கமலின் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சக நடிகைகள் வந்திருந்தனர்.

குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிசி, பூர்ணிமா பாக்யராஜ், அம்பிகா, ஷோபனா, பாக்யராஜ், மோகன் உள்ளிட்ட பலர் வருகை தந்த நிலையில் அனைவரும் தாங்கள் டீன் ஏஜ் வயதில் ஆடியது போல நடனமாடினார். தாங்கள் சின்ன வயது பேவரைட் நடிகைகளை மீண்டும் பார்த்து ரீவைண்ட் செய்து கொண்டனர் ரசிகர்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

20 August, 2021, 7:41 pm

Views: -

5

3

More Stories