இந்தியன் 2 படத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் காலமானார்…! அதிர்ச்சியில் திரையுலகினர்..!


இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் நம்ம ஊரு இயக்குனர் ஷங்கர்.

ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ் போன்ற பல படங்களை இயக்கிய பின் கமலுடன் இந்தியன் என்ற படத்தில் இணைந்தார் ஷங்கர். அந்த படம் பெரிய அளவில் ஹிட்டானது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்தியன் படத்தில் நடித்த பிரபல நடிகர் நெடுமுடி வேணு இன்று காலமானார்.

இந்தியன் மட்டுமின்றி அந்நியன், பொய் சொல்ல போறோம், சிலம்பாட்டம், சர்வம் தாள மயம் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும், சார்லி உட்பட ஏராளமான மலையாள படங்களிலும் நெடுமுடி வேணு நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மூன்று முறை தேசிய விருது பெற்றவர் நெடுமுடி வேணு.

நெடுமுடி வேணு அவர்களின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் இந்தியன் 2 விலும் நடித்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

11 October, 2021, 11:36 pm

Views: -

1

0