20 வருஷம் இவங்க போட்ட பிச்சை… காலில் விழுந்து கதறி அழுத சித்தார்த் – Emotional வீடியோ!

1

43 வயதாகியும் பார்த்த கண்ணனுக்கு இன்னும் இளமையோடு இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.அதை தொடர்ந்து இவர் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் ஹிந்தியிலும் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 2003இல் மேக்னாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார் .

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜனின் மனைவி சுஜாதா சர்ப்ரைஸ் விசிட் கொடுத்தார். அவரை பார்த்ததும் சித்தார்த் செம ஷாக் ஆகி காலில் விழுந்து கதறி அழுதார். அவரை பார்த்ததும் இவ்வளவு எமோஷனல் ஆக என காரணம் என்றால், சுஜாதா அம்மா தான் சித்தார்த்தை ஹீரோவாக பாய்ஸ் படத்தில் நடிக்க வையுங்கள் என ஷங்கருக்கு சிபாரிசு செய்தாராம். அதுவரைக்கும் சித்தார்த் இயக்குனர் ஆகவேண்டும் என்ற கனவில் மணிரத்தினத்திடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தாராம். எனவே சுஜாதா அம்மா போட்ட பிச்சையால் தான் என்னுடைய 20 ஆண்டு கால சினிமாவை நான் இப்போது கொண்டாடுகிறேன் என எமோஷனலாக கூறினார் சித்தார்த். இதோ அந்த வீடியோ:

3 June, 2023, 8:48 pm

Views: -

0

0

Tags: Siddharth
More Stories