10 YEARS OF MANKATHA டிவிட்டரை அமர்க்களபடுத்தும் தல ரசிகர்கள்!


மங்காத்தா திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்த் திரையுலகே வியக்கும் பல சாதனைகள் புரிந்தது. அதற்கு முன்பு வரை ரஜினி, கமல், விஜய் என பெரிய நடிகர்களின் மைல்ஸ்டோன் படங்களான 50வது மற்றும் நூறாவது படங்கள் வெற்றி பெற்றதில்லை. அஜித்தின் 50வது படமான மங்காத்தா அதை முறியடித்து புதிய அத்தியாயத்தை உருவாக்கியது.

ரசிகர்களின் அளவிட முடியாத அன்பைப் பெற்றவர் அஜித். சரோஜா, கோவா போன்ற கதையில் சிரத்தை இல்லாத படங்களை எடுத்துக் கொண்டிருந்த வெங்கட்பிரபு அஜித்தை இயக்குகிறார் என்றதும், பாராட்டியவர்களை விட அஜித்துக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என கவலைப்பட்டவர்களே அதிகம். படம் அறிவிக்கப்பட்டது முதல், ரிலீஸ் தேதி வரை என்ன நடக்குமோ என்ற படபடப்பை சுமந்தே காலம் தள்ளிக்கொண்டிருந்தனர் அஜித் ரசிகர்கள்.

இறுதியில், தமிழ் சினிமா அதுவரை கண்டிராத மாஸ் வில்லனையும் ஹீரோவையும் ஒரே முகத்தில், தல அஜித்தின் உருவத்தில் காட்டியிருந்தார் வெங்கட்பிரபு. தல போட்டோவை காமிச்சாலே நாங்கள் பொங்கல் வச்சு கொண்டாடுவோம் என சொல்லும் ரசிகர்களுக்கு தல தீபாவளியே கொண்டாடும்படி படம் அமைந்தது.

இந்த படம் வந்து இன்றோடு 10 வருஷம் ஆச்சு. ஆனால் இந்த படத்தை பற்றி இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். “DecadeofMankatha” என்ற ஹேஸ்டேக்கை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

31 August, 2021, 1:37 pm

Views: -

0

0