மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்த நல்லெண்ணெய் சித்ரா !

1

கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இயக்கிய அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ராஜபார்வை என்னும் கமலின் நூறாவது படத்திலும் நடித்தார்.

இப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த இவர் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ஆட்ட கலசம் என்னும் படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆனார்.

பிறகு தமிழுக்கு வந்த இவர் மனோபாலா இயக்கத்தில் உருவான ரஜினியின் ஊர்க்காவலன், கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், நல்லெண்ணெய் விளம்பரம் மூலம் மேலும் பிரபலமானார்.

பிறகு சினிமாவுக்கு டோட்டலாக ஒரு கும்பிடு போட்டு திருமணமாகி செட்டிலாகிவிட்டார். இந்த நிலையில் சாலிகிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சித்ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலையில் அவரது உயிர் பிரிந்தது.

21 August, 2021, 8:52 am

Views: -

3

3

More Stories